தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர், ஏப் 04 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்தத் தை ரத்து செய்யக்கோரி தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலை யில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பாரத ஸ்டேட் வங்கி அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும் தமிழக வெற்றி கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர,ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக