மானாமதுரையில் ஒரே பெண்ணை காதலித்த இருவரில் ஒருவருக்கு வெட்டு, மற்றொரு காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த ஆதனூர் கிராமத்தில் வசித்து வரும் முத்துக்குமார் மகன் லோகேஸ்வரன் (24) மற்றும் கிளங்காட்டூரை சேர்ந்த பாலா என்பவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்த நிலையில், ஏற்கனவே இப்பிரச்சனை சம்பந்தமாக கிளங்காட்டூரை சேர்ந்த அழகர் மகன் வினோத் (23) பஞ்சாயத்து பேசியதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு ஆதனூரை சேர்ந்த சித்திரைவேலு மகன் கௌதமனுடன் (29) லோகேஸ்வரன் பேசிக் கொண்டிருக்கையில் கிழங்காட்டுரை சேர்ந்த அழகர் மகன் வினோத் (23), ரமேஷ் மகன் பிரதாப் (24), முனியாண்டி மகன் ராஜேஷ் (24), முருகன் மகன் இந்துராஜ் (26) ஆகியோர் லோகேஸ்வரனை அசிங்கமாக பேசி அரிவாள் மற்றும் வாளால் தாக்கி கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சம்பவ இடத்திலேயே நிலை குலைந்த லோகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஸ்வரனுக்கு கண் புருவம், முழங்கை, உள்ளங்கை மற்றும் முழங்காலுக்கு கீழ் உள்ளிட்ட பாகங்களில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் கௌதமன் அளித்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை நகர் காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் அகிலன் மார்ட்டின் உடனடியாக வழக்கு பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரவீந்திரன் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்கூறிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் மூன்று பேருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக