திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே உள்ள வீராச்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 31) என்பவர் ஆலங்காட்டு பிரிவு பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த 23-ந் தேதி மர்ம ஆசாமிகள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.12,500 -ஐ திருடி சென்றனர். இது குறித்து அலங்கியம் போலீசில் சங்கர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஸ் அசோக் உத்தரவின் பேரில் அலங்கியம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு. செய்தனர்.
இந்த நிலையில் குற்றப்பிரிவு போலீசார் மணக்கடவு சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொண்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் சங்கர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற லோட்ட மதன் (25), சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்கிற எபி (25), காவரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக