தமிழக வெற்றி கழகம் சார்பில் ரம்ஜான் முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
வேலூர் ,மார்ச் 27 -
வேலூர் மாவட்டம், மாங்காய் மண்டி பஸ் ஸ்டாப் அருகே, என்.எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம், வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வேலூர் மேற்கு மாவட்டம் தொண்டரணி, வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப் பாளர், பி.ஏ.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இஸ்லாமிய சொந்தங்கள், மாவட்ட த.வெ.கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஒன்றிய பகுதி மற்றும் அணி நிர்வாகிகள் உறுப்பி னர்கள் என பலர் கலந்து கொண்டனர். இப்புனித நன்னாளில் அன்பை பகிர்ந்து அனைவருக்கும் பிரியாணி பொட்டலம், பழங்கள் பொட்டலும், கபாப் பொட்டலம், நோன்பு கஞ்சி உள்ளடங்கிய நலத்திட்ட பைகளை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர்களுக்கு வழங்கினர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக