பேருந்து நிலையமா? குடிகாரர்களின் கூடாரமா? மானாமதுரை பொதுமக்கள் கேள்வி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

பேருந்து நிலையமா? குடிகாரர்களின் கூடாரமா? மானாமதுரை பொதுமக்கள் கேள்வி.

 

IMG-20250329-WA0250

பேருந்து நிலையமா? குடிகாரர்களின் கூடாரமா? மானாமதுரை பொதுமக்கள் கேள்வி. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி 21வது வார்டு பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் பைப் ஆனது குடிமகன்களால் அடித்து உடைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, மது பாட்டில்கள் சின்டெக்ஸ் டேங்க் அருகில் விற்கப்படுவதாகவும், குடிமகன்கள் தாங்கள் குடிப்பதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சின்டெக்ஸ் டேங்கை சேதப்படுத்தி குடிநீரை வீணடிக்கின்றனர். இவ்வாறு பொதுமக்களின் குடியை கெடுத்து இவர்கள் மதுபானங்களை 24 மணி நேரமும் குடிப்பதற்கான கூடாரமாக மாற்றி வருகின்றனர். இதனால் அங்கு நீர் எடுக்க வரும் பெண்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சின்டெக்ஸ் டேங்கை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மற்றும் சட்டவிரோதமான மதுபானங்கள் விற்பனை, பொது இடமென்று பாராமல் அதே இடத்தில் இரவு பகல் பாராது மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கும்பலை தடுத்து நிறுத்திட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad