மதுரையில் பட்ட பகலில் ஆட்சியர் அலுவலக சாலையில், இளைஞரை காரில் வந்த மர்மகும்பல் வலுக்கட்டாயமாக அடித்து கடத்தல்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காந்திஅருங்காட்சியகம் முன்புள்ள சாலையில், வெள்ளை நிற சட்டை அணிந்து நின்றவரை காரில் வந்த மர்மகும்பல் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 6 முதல் 7 பேர் கொண்ட மர்மகும்பல் நின்றவரை அடித்து காரில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்து வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து., அங்கிருந்தவர்கள் கூச்சலிட காரில் வந்த கும்பல் கடத்தியவருடன் அங்கிருந்து புறப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
பொதுமக்களின் புகாரை தொடர்ந்து., சம்பவ இடத்திற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். தொடர்ந்து., பதிவென் இல்லாத பலினோ (BALINO) காரை விரட்டி பிடிக்க முற்பட்ட போது கார் கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசார் கண்ணில் இருந்து மறைந்தது.
தற்போது இந்த சம்பவம் குறித்து., அனைத்து காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும்., காரை பின் தொடர்ந்த போலீசார் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பலை படம்பிடித்துள்ளார். அதனை ஆதாரமாக கொண்டு தல்லாகுளம் போலீசார் கடத்தலில் ஈடுபட்ட இருசக்கர வாகன யாருடையது.? காரில் கடத்தப்பட்டவர் யார்.? கடத்தலுக்கான காரணம்.? கடத்தலில் ஈடுபட்ட கும்பல் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக