சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!
திருப்பத்தூர், மார்ச் 29 -

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்  மல்லப்பள்ளி ஊராட்சியில் பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர்
 எ.வ.வேலு தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,மல்லப்பள்ளி ஊராட்சியில்
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும்,ஜோலார் பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முத்தனப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழாவிலும்மேல் மல்லப்பள்ளி கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய கடை திறப்பு விழாவிலும்திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமானக.தேவராஜி  MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார்,
ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார்,ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சிமன்ற து.தலைவர் கேசவன் மற்றும் அரசு துறைஅதிகாரிகள் கழக முன்னோடிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad