அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற சாதியற்ற சமத்துவம் விழிப்புணர்வு கூட்டம் பெ. வடிவேலு பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற சாதியற்ற சமத்துவம் விழிப்புணர்வு கூட்டம் பெ. வடிவேலு பங்கேற்பு!

நெமிலி அருகே ஆட்டுப்பாக்கம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சாதியற்ற சமத்துவம் விழிப்புணர்வு கூட்டம் பெ. வடிவேலு பங்கேற்பு!
ராணிப்பேட்டை ,மார்ச் 22-

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் பிரிவின் கீழ் இயங்கும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஜாதியற்ற சமத்துவம் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் யூசுப்கான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி வெங்கட கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் சமூக வலைதளங்களில் இருந்து விலகி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் போதை பழக்கத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அடிமையாகாமல், தங்களை தாங்களே சுய ஒழுக்கத்துடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இளம் வயதில் திருமணம் செய்தால் கல்வி கற்பது பாதிப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடல் நலத்தையும் அது பாதிப்படைய செய்யும். குழந்தை திருமணங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுப்பதற்கு முன்வர வேண்டும். உங்கள் பெற்றோர்கள் ஆயிரம் கனவுகளோடு உங்களை கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் கனவுகளை நீங்கள் சிதைக்காமல் நன்றாக படித்து டிஎன்பிசி, யுபிஎஸ்சி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளை எழுதி பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் அனைவரும் சமத்துவமான சமுதாயத்தை காண்பதற்கு பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார். முன்னதாக கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் ரேகா, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, பேராசிரியர்கள் நடராஜன், ஜெய் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேராசிரியர். குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad