விபத்தில் சிக்கி தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி பலி . - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

விபத்தில் சிக்கி தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி பலி .

விபத்தில் சிக்கி தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி பலி 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக (HC 2815- 2006 Batch) பணியாற்றும் 
நாங்குநேரி மறுகால்குறிச்சி ஊரைச் சேர்ந்த முத்தையா வயது (45 )என்பவர் 

இன்று 28.03.2025 ஆம் தேதி 08.00 மணி அளவில் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணி முடித்து காவல் நிலையத்திற்கு வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பொழுது

 கூடங்குளம் பைபாஸ் சாலை வம்பளந்தான் முக்கு அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி மேற்கொண்டு

 நாகர்கோவில் முத்து நியூரோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad