போக்குவரத்து விதிமுறைகள், மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

போக்குவரத்து விதிமுறைகள், மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

IMG-20250322-WA0062

 கோத்தகிரி காவல்துரை சார்பாக விழிப்புணர்வு:  


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரியில், கோத்தகிரி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.


காவல் ஆய்வாளர் திரு. ஜீவானந்தம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாணவர்களுக்கு சைபர் கிரைம் மோசடி மற்றும் குற்றங்கள், போதை பொருள் விழிப்புணர்வு பற்றி SSI ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.


 போக்குவரத்து ஆய்வாளர் திரு. பதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து விதிமுறைகள்,  மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பற்றி, போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த சகோதரிகள் பார்வதி மற்றும் தங்கம்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


மாணவர்கள் கூறுகையில், இந்த கூட்டமானது தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது எனவும்,இது போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் பொதுமக்களின், மாணவச் செல்வங்களின் நலனை கருதி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி பொது இடங்களில் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad