நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் *நகர செங்குந்த மகாஜன சங்கம்* சார்பில் *வேதாத்திரி மகரிஷி* அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு நாள் *குமாரபாளையம் J.K.K. நடராஜா நகரில்* அனுசரிக்கப்பட்டது.
நிகழ்விற்கு *கிளைச் சங்க பொறுப்பாளர் ரகுபதி தலைமை* வகித்தார், குமாரபாளையம் *நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் J.R.N.தங்கராஜ், ஆசிரியை சௌந்தரம், காஞ்சனா, கு.பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை* வகித்தனர்.
*நிகழ்வில் J.R.N. தங்கராஜ் அவர்கள் பேசும் பொழுது,*
வேதாத்திரி மகரிஷி அவர்கள் 18-வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, அப்பொழுது அவருக்கு *ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணராவின்* நட்பு கிடைக்க அவர் மூலமாக *தியானம், யோகா* போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார் என குறிப்பிட்டார். மேலும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய *முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளை* கற்று தேர்ச்சி பெற்றார். இது மட்டுமின்றி *இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவி பயிற்சியாளராகவும்* பணிபுரிந்தார். 1957ல் மகரிஷி அவர்கள் *உலக சமாதானம்* என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். இந்த பிரபஞ்சத்தை பற்றியும் மனித வாழ்க்கையை பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களை பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகிற்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இதனை *நாம் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அவர்கள் வாழ்வில் மேம்பட* நாம் அனைவரும் உதவ வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.
விழாவில் *செங்குந்த மகாஜன சங்க மாவட்ட செயலாளர் K.P.சீனிவாசன், நகர பொருளாளர் S.பிரபு, கிளைச்சங்க நிர்வாகிகள் பிரபாத் J.N.மாதேஸ்வரன், சித்தலிங்கம், கணேசன், வேலுச்சாமி, மைக்ரோடெக் சீனிவாசன் , கதிர்வேல் மற்றும் கிளைச்சங்க பொறுப்பாளர்கள்* கலந்து கொண்டு வேதாத்ரி மகரிஷி அவர்களின் *திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை* செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக