நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்.வசந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா!
ராணிப்பேட்டை ,மார்ச் 28-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏ. வசந்தி அவர்கள் தலைமையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப் பாளர்களாக நெமிலி நண்டு பிராண்ட் லுங்கி நிறுவனத்தின் உரிமையாளர். கடிகாசலம், நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு பொருள் வழங்கினர். இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரிமா சங்க உறுப்பினர் கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக