இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கரிகாடு மந்து பகுதியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகில் அமைந்திருக்கும் கரிகாடு மந்து பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் மக்கள் வசிக்கும் ஊருக்குள் ஊடுருவாமல் இருக்க பல அரசு அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இன்றைய தினத்தில் இந்த சிறப்பு முகாமில் சக்திவேல் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு அதிகாரி உதகை, சிறப்பு தாசில்தார் ஆனந்தி உதகை,கோமதி சிறப்பு தாசில்தார் குந்தா, அனுராதா வருவாய் ஆய்வாளர் அதிகாரி, தினேஷ் குமார் கிராம நிர்வாக அலுவலர் இத்தலார், ராம்கி கிராம உதவியாளர், கோகுல் கிராம உதவியாளர், ஜாஹிர் அப்பாஸ் எமரால்டு காவல் நிலையம் தேவிகா கிராம சுகாதார செவிலியர் இத்தலார், உமா கௌரி ஆஷா பணியாளர், மற்றும் பிரபாகரன் எமரால்டு காவல் நிலையம் காவல் ஆய்வாளர், மருத்துவர் நவீன் பிக்கெட்டி, சிவக்குமார் காவல் ஆய்வாளர் பலர் உடனிருந்து இந்த முகாமினை சிறப்பாக நடத்தி வைத்தனர்.. இந்த முகாமில் சிறப்பு விழிப்புணர்வு மட்டுமின்றி மக்களுக்கு இருக்கும் குறைகளை கரிகாடு பகுதியில் வசிக்கும் மக்கள் சிறப்பு தாசில்தார் கோமதி அவர்களிடம் மனு அளித்துள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக