வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி
வேலூர் மார்ச் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 1.கொல்லமங்களம் ஊராட்சி அய்யா கவுண்டன்பட்டி - தட்டாங்குட்டை இடையே அகரம் ஆற்றின் குறுக்கே ரூ.6கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்
2.பள்ளிகுப்பம் -செல்லக்குட்டப்பட்டி இடையே அகரம் ஆற்றின் குறுக்கே ரூ.6கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்.
3.கூடநகரம்-அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.37கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படுமென நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நீர்வளத்துறை மானியகோரிக்கையில் அறிவிப்பு வெளியானது
அதனை பெற்றுக்கொடுத்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர் D.M.கதிர் ஆனந்த் MP அவர்களை மாதனூர் ஒன்றிய குழு தலைவர் ச.சுரேஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக் களையும் மற்றும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக