நவத்திருப்பதி - ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 30 மார்ச், 2025

நவத்திருப்பதி - ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் 
பஞ்சாங்கம் வாசித்தல்

ஸ்ரீவைகுண்டம். மார்ச் 31. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.

ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் தாமிரபரணி நதியின் கரையோரத்தில் பெருமாளுக்குரிய நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான்சுவாமி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு விஸ்வாஸூ வருஷ பஞ்சாங்கம்'' வாசித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முன்னதாக காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனமும், புதிய வஸ்திரம் சாத்துதலும், 9.45 மணிக்கு தாயார்கள் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் உற்சவர் கள்ளபிரான்ஸ சுவாமி சயனக்குறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்னர் 10.15 மணியளவில் திருவாராதனம் நடந்தது., 

ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி விஸ்வாஸூ வருஷ பஞ்சாங்கம்'' வாசித்தார். அதில் விஸ்வாஸூ ஆண்டில் விளச்சல் நிறைவாகவும் இருக்கும். பசுமாடு கன்றுகள் சிறப்படையும் நல்ல மழையும் காரியங்கள் நடக்கும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ் வாசு. நாராயணன். அனந்த பத்மநாபன். சீனு. ஸ்தலத்தார்கள் சீனிவாசன், கண்ணன் ஸ்ரீனிவாசன், தேவராஜன் ஸ்ரீகிருஷ்ணன்
.வெங்கடேசன்.நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன்மணிகண்டன். 

ஆய்வாளர் முருகன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாததேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் ஸ்தலத்தார்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad