மார்ச் 22 ஸ்ரீவைகுண்டளத்தைச் சுற்றி உள்ள நவதிருப்பதிகோவில்களில் திருப்புளியங்குடி 3 வது திருப்பதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.
காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 6 மணிக்கு நித்தியல். 7 மணிக்கு உற்சவர் காய்சினிவேந்தன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 8.10 மணிக்கு கொடிப்பட்டம் வீதி சுற்றி வந்தது. 8.55 மணிக்கு அர்ச்சகர் ரமேஷ் கொடி ஏற்றினார். காலை 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 12 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்ய பிரபந்தங்கள். சாத்துமுறை. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தினசரி காலை உற்சவர் பல்லக்கிலும் இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம் அனுமார் வாகனம் சேஷ வாகனம் கருட வாகனம். யானை வாகனம் குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. மார்ச் 26 ந்தேதி 3 கருட சேவை நடைபெறுகிறது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான். நத்தம் எம்இடர்கடிவான் திருப்புளிங்குடி காய்சினவேந்நன் ஆகிய மூன்று பெருமாள் களும் கருட வாகனத்தில் காட்சி அளிப்பர். மார்ச் 30 ந்தேதி தெப்பமும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். கண்ணன். வெங்கடேசன். அறங்காவலர் குழுத் தலைவர்அருணாதேவி கொம்பையா. அறங்காவலர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன். முத்து கிருஷ்ணன். பாலகிருஷ்ணன்.
செயல் அலுவலர் கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கோபாலகிருஷ்ணன். சௌந்தரராஜன். காய்சினிவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக