காசநோய் பரிசோதனை முகாம்:
பந்தலூர் அருகே நெல்லியாளம் தேயிலை தோட்ட பகுதியில் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மத்திய மாநில அரசுகளின் 100 நாள் காசநோய் ஒழிப்பு திட்ட முகாமினை முன்னிட்டு
பந்தலூர் காசநோய் பிரிவு, ஆல் தி சில்ட்ரன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் காசநோய் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுக்கும் முகாம் நடைபெற்றது.
நெல்லியாளம் தேயிலை தோட்ட தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கொளப்பள்ளி பல்நோக்கு சுகாதார செவிலியர் கௌதமி, ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், தொழிற்சாலை மேற்பார்வையாளர் சில்வஸ்டர், ஆஷா பணியாளர் பொன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லியாளம் தேயிலை தோட்ட கழக கோட்ட மேலாளர் சிவக்குமார் முகாமினை துவக்கி வைத்தார்.
பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார், பணியாளர்கள் நிர்மலா, ராமநாதன் உள்ளிட்ட குழுவினர் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் காசநோய் குறித்து விளக்கம் அளித்து காசநோய் எக்ஸ்ரே மற்றும் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் நெல்லியாளம் தேயிலை தோட்ட கழகம் 4 வது சரகம் பகுதியிலும் காசநோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
100க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக