குடியாத்தம் ,மார்ச் 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் குடியாத்தம் வாட்டார வளர்ச்சி (B.D.O.) அலுவலகம் முன்பு வயிற்றில் ஈரத்துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நூறு நாள்வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத கால நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசே நூறுநாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைக்காதே.
நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்கி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே.
நூறு நாள் திட்டத்தில் நூறு நாட்களுக்கு வேலை கொடு
இந்த திட்டத்தை நகராட்சி பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.ஆர்ப்பாட்டத்திற்கு நா.பரமசிவம் ஒன்றிய செயலாளர்
தலைமை தாங்கினார். டி.ஆனந்தன் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.காவேரி கட்சி மாவட்ட பொருளாளர் கே.சி.பிரேம்குமார் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.தொ.ச.மாட்டசெயலாளர். கே.கல்பணா சந்தர் மாவட்டக்குழு
ஆர் அக்பர் மாவட்டக்குழு துரைசெல்வம் மாவட்ட துணை செயலாளர் கண்டன உரையாற்றினார்கள் இறுதியாக கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா.கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
இரா. பிச்சமுத்து மாவட்டக்குழு நன்றி கூறினார்.மற்றும் டி.மணியரசன் கே.ஜெயராமன் ஜே.சூரவேலு என.ஜீவானந்தம் என்.வில்வநாதன்
ஏ.சாந்தி வி.தொ.ச மாவட்ட பொருளாளர்
ஜி.தன்ராஜ் 35 க்கும் மேற்பட்டபெண்கள் 25.ஆண்கள் உட்பட 60.பேர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக