நாடு முழுவதும் தலைவிரித்தாடும் தெரு நாய் பிரச்சனை, தேசிய நடவடிக்கை குழு அமைக்க பிரதமரிடம் வலியுறுத்திய சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்.
நாடு முழுவதும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சாலை விபத்துக்கள், உயிரிழப்புகள் போன்ற துயர சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினசரி செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக துரத்தி கடிக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோக்களை பார்க்கும்போது நாம் எத்தகைய ஆபத்தான சூழலை அன்றாடம் கடந்து வருகிறோம் என்னும் பட்டவர்த்தனமான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்பிரச்சனை குறித்த புகார்கள் பன்மடங்கு பெருகிவரும் நிலையில், இந்தியா முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், மனிதாபிமான அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்த தேசிய நடவடிக்கை குழு அமைக்க வேண்டுமென மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் வலியுறுத்தினார். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனை குறித்து பாரத பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தொகுதி வாக்காளர் பொதுமக்கள் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக