வடிவேலு தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

வடிவேலு தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!

பெ. வடிவேலு தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!

ராணிப்பேட்டை, மார்ச் 29 -

ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த நான்கரை மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA)  நிதி ரூ.4034 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் - தமிழ்நாட் டைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் பா.ஜ.க அரசை கண்டித்து இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் 
தக்கோலம் கூட்ரோடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில்  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி அவர்களும்,
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்.MP சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணய்யன்,
மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான. பவானி வடிவேலு, 
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். சிவா, ஒன்றிய நிர்வாகிகள். புருஷோத் தமன், சங்கர், அப்துல் ரகுமான் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad