செய்துங்கநல்லூர் கஸ்பா, வேளாளர் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். கராத்தே மாஸ்டர்.
இவர் நேற்று தனது ஸ்கூட்டரை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார்.
அப்போது அப்பகுதியில் ஒரு பாம்பு வந்ததை பார்த்த ராம்குமார் பாம்பை விரட்ட முயன்றுள்ளார்.
ஆனால், அந்த பாம்பு அவரது ஸ்கூட்டருக்குள் புகுந்து கொண்டது.
இதனால் அதிர்ச்சிய டைந்த ராம்குமார் இது குறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து, சிறப்பு நிலைய அலுவலர் ஜெசுபால் ஞானதுரை தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் விரைந்து சென்று, பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஸ்கூட்டரின் உள்ளே பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அடர் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக