குடியாத்தம், மார்ச் 24 -
அரசு கல்லூரி எதிரில் பயணிகள் நிழல் கூடத்தில் புகுந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி வீரியன் பாம்பு- போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசினர் திருமகள் ஆலை கலைக்கல்லூரி உள்ளது இந்த கல்லூரிக்கு எதிரில் பயணிகள் நிழல் கூடம் உள்ளது இங்கு இன்று இரவு கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று பயணிகள் நிழல் கூடத்தில் புகுந்துள்ளது, மேலும் புஷ் புஸ் என்ற அதிக சத்தத்துடன் பாம்பு பயணிகள் நிழல் கூடத்தில் புகுந்துள்ளது அப்பொழுது அருகே இருந்த சிலர் இதை பார்த்து இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் பயணிகள் நிகழ் கூடத்தில் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி வீரியம் பாம்பை பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர், மேலும் மலைப்பாம்பு போல் பெரிய உருவத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி வீரியம் பாம்பை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர் மேலும் பயணிகள் நிழல் கூடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக