திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பில் சிறுநீரக தின விழிப்புணர்வு மனித சங்கிலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பில் சிறுநீரக தின விழிப்புணர்வு மனித சங்கிலி.

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பில் சிறுநீரக தின விழிப்புணர்வு மனித சங்கிலி

60 சிறுநீரக தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி. வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் M.K.M. முகமது ஷாபி தலைமை தாங்கினார். போக்குவரத்து துணை ஆய்வாளர் ஜான் கென்னடி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தீவிர சிகிச்சைப் பிரிவின் முதன்மை மருத்துவர் பாலா சிறுநீரக தின சிறப்புரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள். ஷிபா அலைடு மற்றும் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் மாணவர்கள், STC கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் நேசம் கல்லூரி மாணவர்கள் என 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் இதில் பொதுமக்களுக்கு சிறுநீரக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இறுதியில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் Dr.அகமது யுகப் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் மார்கெட்டிங் பிரிவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad