குடியாத்தம் , மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முன்னாள் திமுக பிரமுகர் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியாத்தம் நகர பாஜக சார்பில் மனு அளித்தனர்,திமுகவின் முன்னாள் பிரமுகர் குடியாத்தம் குமரன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் ஒருமையிலும் மிகக் கடுமையான சொற்களையும் பயன் படுத்தி தரக்குறைவாக மொபைல் ஜர்னலிஸ்ட் youtube சேனலில் பேசி இருக்கிறார் தொடர்ந்து பாஜகவின் பல மாநில நிர்வாகிகளையும் அவதூறாக பேசி வருகிறார், இதற்கு முன்பும் இதே போல் பேசியதற்கு பாஜக சார்பில் புகார் தந்தும் குமரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் உடனடியாக இந்த மனுவை விசாரணை செய்து குமரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று குடியாத்தம் நகர பாஜக சார்பில் தெரிவித்தனர், குமரன் பேசியதற்கான ஆதாரம் பென் ட்ரைவில் பதிவு செய்து புகார் உடன் இணைக்கப் பட்டுள்ளது, மேலும் குமரன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பாஜக சார்பில் குமரனுடைய வீட்டை முற்றுகை இடுவோம் என பாஜக பிரமுகர்கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக