ஏர்வாடி தர்காவில் அரசு மனநல மருத்துவமனை திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது வலியுல்லா தர்கா உள்ளது இங்கு ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம் ஏர்வாடி தர்காவிற்கு வந்து சென்றால் மனநலம் பாதித்தவர்கள் குணமாகுவார்கள் என்று ஒரு ஐதீகம் பல ஆண்டுகளாக உள்ளது.கடந்த 2001 இல் தனியார் மனநல காப்பகத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட மனநோயாளிகள் தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா உலுக்கியது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஏர்வாடி தர்காவில் மன நோயாளிகளை சங்கிலியால் கட்டி வைக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் அடிப்படையில் ஏர்வாடி தர்காவில் மன நோயாளிகளை யாரையும் சங்கிலியால் கட்டக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணித்து வந்தனர் ஏர்வாடி தர்காவிற்கு வரும் மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக 2014ல் தர்கா வளாகத்தில் உள்ள முதல் கட்டமாக மார்க்க மருத்துவம் துவங்கப்பட்டு வரும் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் 2016ல் ஏர்வாடி தர்கா நிர்வாகம் சார்பாக ஒரு ஏக்கர் இடம் வாங்கி கொடுத்து அதில் அரசு மனநல காப்பகம் மருத்துவமனை கட்டி உள்ளது. சில நாட்களாக தர்கா வளாகத்தில் உள்ள மார்க்கம் மருத்துவம் செயல்பாடு இல்லாமல் இருந்ததால் மாவட்ட ஆட்சியை தலைவர் உத்தரவின் பேரில் நேற்று மாலை ராமநாதபுரம் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் பிரகலாதன் தலைமையில் அரசு மனநல மருத்துவமனை ஏர்வாடி மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை இணைந்து நடத்தும் மார்க்கம் மருத்துவம் மருத்துவமனையை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் முர்சல் ஆலிம் சிறப்பு துவா ஓதினார் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மைய தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மனநல மருத்துவர் அர்சீத் காட்கில் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக