ஈரோடு மாநகராட்சியின் நிதிநிலை தாக்கல் தொடர்பான மாமன்ற கூட்டம் மற்றும் சாதாரண கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்களில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஈரோடு 2025-2026ம்ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் நாகரத்தினம் தாக்கல் செய்தார். அப்போது நிதிநிலை அறிக்கை நகல் முன்னதாக வழங்கவில்லை எனக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்று மாமன்ற கூட்டத்தில் அதிமுகவை எதிர்கட்சி தலைவர் தங்கமுத்து, மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஜெகதீசன், அதிமுக கவுன்சிலர் தங்கவேல் ஆகியோர் மாநகராட்சியில் கடந்த கூட்டத்தில் போது மாநகராட்சியில் சொத்துவரியை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கேள்வி எழுப்பினர். மேலும் மாநகராட்சியில் முறையாக குடிநீர் வழங்க வில்லை எனவும் பாதாள சாக்கடைக்காக பணம் மட்டும் வாங்கி கொண்டு சாக்கடை தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்பதாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தை பொது ஏலத்தில் தனியாருக்கு வழங்கியது தொடர்பாக அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து தனியாருக்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய கோரி அதிமுகவினர் கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுகா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக