திருப்பூர் மாவட்டம் குண்டடம் திமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூபாய் 4000 கோடி தமிழகத்திற்கு தர மறுக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து குண்டடம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் மருத்துவ அணி செயலாளர் இந்திராணி ஆகியோர் முன்னிலையில் தலைமை பொது குழு உறுப்பினர் கருணாகரன், தலைமையில் பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய அவைத்தலைவர் அர்ஜுனன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், கிளைச் செயலாளர் துரைசாமி, ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெகநாதன், ஒன்றிய பிரதிநிதி வேலுச்சாமி, கிளைச் செயலாளர் காளிதாஸ், முத்துசாமி, பாலசுப்பிரமணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மணிவேல், மற்றும் BLA2 இளைஞர் அணி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் 100 நாள் பணியாளர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக