இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தரமணி கல்லூரியில் பாலியல் குற்றம் நடைபெற்றதை தொடர்ந்து குற்றவாளிரை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்ட கல்லூரி நிர்வாகத்தையும், துணை போன காவல்துறையையும் கண்டித்தும், தமிழகம் முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தியும், நியாயம் கேட்டு போராடிய SFI தோழர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் இன்று மார்ச் 28 காலை 10 மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் M.E.நிரூபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் J.தீபக்ராஜ் கண்டன உரையாற்றினார். மாவட்ட து.தலைவர் துர்காதேவி, மாதர் சங்க மாவட்ட தலைவர் V.பாப்பாத்தி, DYFI மாவட்ட செயலாளர் K.முகேஷ், மாதர் சங்க மாநகர் தலைவர் நிறைமதி, செயலாளர் சோபா ஆகியோர் பங்கேற்றனர். மாணவர் சங்க மாவட்ட இ.செயலாளர் சந்தோஷ் பாண்டியன் நன்றியுரையாற்றினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக