பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பாக 'பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பாக "பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிப்பதற்காக தூத்துக்குடி நகரம், கோவில்பட்டி, மணியாச்சி மற்றும் விளாத்திகுளம் ஆகிய உட்கோட்ட பகுதிகளில் 

மொத்தம் 4 அரசு மாணவியர் தங்கும் விடுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தங்கியுள்ள 180 மாணவிகளுக்கு கராத்தே அடிப்படை பயிற்சி கடந்த 20.02.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா நேற்று (21.03.2025) மணியாச்சி உட்கோட்டத்தில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. 

இதில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு உடனிருந்தார்.

அதேபோன்று கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையிலும் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

இந்த தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பயிற்சி நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்வுகளின் போது மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள், தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜமால் உட்பட காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad