இந்நிலையில் அவரது இளைய மகன் விஜயகுமார்(13) 8ம் வகுப்பு மாணவன் நேற்று பள்ளிக்குச் சென்ற அவரை அறிவியல் பாடப் பிரிவின் போது குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் மாணவன் விஜயகுமார் திருத்த தேர்வு விடைத்தாள் எழுதவில்லை எனக்கூறி தேர்வு எழுதும் அட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியும் ஆசிரியர்கள் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மாணவனின் தாய் கூறுகையில், தனது மகன் படிக்கவில்லை என்றால் ஆசிரியர் பயமுறுத்த வேண்டும் இல்லை என்றால் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். இதுவரையில் தன்னுடைய மகன் படிக்கவில்லை என்று பள்ளி மற்றும் ஆசிரியர் தரப்பில் புகார் எதுவும் கூறவில்லை.
அப்படி இருந்தும் ஆசிரியர் தன்னுடைய மகனை தாக்கியதில் இன்னும் பலமான முறையில் காயம் ஏற்பட்டிருந்தால் அவன் கோமா நிலைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இது போன்ற செயலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் R.மஞ்சுநாத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக