கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூடலூர் காந்தி திடலில் நகர செயலாளர் இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, நகர அவை தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.
மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, தலைமை கழக பேச்சாளர்கள் பெரம்பலூர் விஜயரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, இளங்கோவன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் - கூடலூர் தொகுதி பார்வையாளர் பரமேஷ்குமார், தலைமை கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, சிவானந்தராஜா, சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், மாவட்ட திட்டகுழு உறுப்பினர் ராஜேந்திரன், கூடலூர் நகரமன்ற தலைவர் பரிமளா, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலன், கோமதி, நகர நிர்வாகிகள் ஜபருல்லா, நாகேஸ்வரி, தமிழழகன், ரசாக், நெடுஞ்செழியன், தேவர்சோலை பேரூர் செயலாளர் சுப்ரமணி உட்பட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில், நகர துணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக