திருடு போன 40 சவரன் தங்க நகைகள் - வெள்ளி பொருட்கள் மீட்பு- விரைந்து நடவடிக்கை எடுத்து 7-பேரை கைது! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

திருடு போன 40 சவரன் தங்க நகைகள் - வெள்ளி பொருட்கள் மீட்பு- விரைந்து நடவடிக்கை எடுத்து 7-பேரை கைது!


காட்பாடி மார்ச் 26 -

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போன 40 சவரன் தங்க நகைகள் - வெள்ளி பொருட்கள் மீட்பு- விரைந்து நடவடிக்கை எடுத்து 7-பேரை கைது செய்த காவல்துறையினர் .காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்டுக்குளம் பகுதியில், கடந்த 20.03.2025-ம் தேதி, ராஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து நகைகள் வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட நிகழ்வு சம்மந்தமாக வேலூர் காட்பாடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் உத்தரவின் பேரில், காட்பாடி உட்கோட்ட காவல் துணை காண்காணிப்பாளர் பழனி மற்றும் மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை காண்காணிப்பாளர் திருநாவுக்கரசு ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அறிவியல் ரீதியான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைமேற்கொண்டு 25.03.2025-ம் தேதி மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய 7 எதிரிகளான 1)தியாகராஜன் வ/35, த/பெ.பழனி, வேலூர்.
 2)வெங்கடேஷ் வ/36, த/பெ.கண்ணன், திருவண்ணாமலை.
 3)சதீஷ் வ/30, த/பெ.ஏழுமலை, திருவண்ணாமலை. 
4)சரவணன் வ/23, த/பெ.ஆண்டி, சேலம். 5)பாரதி வ/36, த/பெ.ஏகாம்பரம், திருவண்ணாமலை.
 6)கோபி வ/39, த/பெ.சீனிவாசன், திருவண்ணாமலை. 
7) புஷ்பராஜ் வ/27, த/பெ மாதையன், சேலம் மாவட்டம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன காவல் துறையினரின் இந்த துரித நடவடிக்கையினால் ஓட்டல் கடை நடத்தி வரும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விரைவாக மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இதில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad