தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் வி பி ராமநாதன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் ஏற்பாட்டில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு மாசி திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை யாக வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாபுஜி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சிங்கராஜா , இளைஞரணி வி எஸ். முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக