தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா பண்டிகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இதனிடையே தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பக்தர்களின் நலன் கருதி கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி குலசை முத்தாரம்மன் கோவிலில் ரூ. 19.70 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா பிறப்பு பூஜையுடன் இன்று நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ஹரி கிருஷ்ணன், குலசை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பவித்ரா, மாவட்ட திமுக பிரதிநிதி மதன்ராஜ், குலசை நல் நூலகர் மாதவன், கோவில் தலைமை குருக்கள் குமார் பட்டர் மற்றும் குருக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக