திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் வணிகர்கள் சார்பில் இன்று மார்ச் 19, மாலையில் கடைகளுக்கு வரி வசூல் செய்வது குறித்து வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு மனு மூலம் தெரியப்படுத்தும் விதமாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு சட்டவிதிகளை மீறி அநியாய வரி வசூல் செய்வதை கண்டித்து அனைத்து வணிகர் சங்கங்கள், திருச்செந்துள் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வரிகொடா இயக்கம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த முடிவை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளருக்கு மனு மூலம் தெரியப்படுத்துவது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எதுவும் தெரிவிக்கவில்லை எனில் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மேற்கண்ட இரு தீர்மானங்களின் அடிப்படையில் போராட்டம் நடந்தும் அரசு செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இறுதியாக காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம், கலாம் வியாபாரிகள் சங்கம் இந்திய சேவா அறக்கட்டளை, தமிழ்நாடு மாணவர் இயக்கம், நாடார் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு, யாதவ வியாபாரிகள் சங்கம், காந்தி தினசரி சந்தை வியாபாரிகள், திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம், அனைத்து சமுதாய நல இயக்கம் உள்ளிட்ட பல சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் வியாபாரிகள் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக