இதில் வரவேற்புரையை பேராசிரியர் முனைவர் மேரி ஜெலாஸ்டீன் கலா அவர்கள் வழங்கினார்கள் கல்லூரியின் இந்த ஆண்டிற்கான கல்லூரி ஆண்டறிக்கையினை கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ் அவர்கள் வழங்கினார்கள்
பின்னர் இந்த ஆண்டு ஓய்வு பெறப்போகும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். கல்லூரியின் செயலர் அருட்தந்தை புஷ்பராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரியின் அதிபர் அருட்தந்தை இன்னாசி முத்து அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலர் டாக்டர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டிற்கான மாணவர்களுக்கான பரிசளிப்புகள் வழங்கப்பட்டன.
சிறப்புப் பரிசுகள் அறக்கட்டளைப் பரிசுகள் கல்விசார் பரிசுகள் போன்றவை வழங்கப்பட்டன. இறுதியாக கலைப்புல முதன்மையர் முனைவர் அலாய்சியஸ் ஆல்பர்ட் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பேராசிரியர்களுக்கான நாடகம் நடத்தப்பட்டது.இவ்விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் மற்றும் கலைப்புலத்தை சார்ந்த முதன்மையர்கள் சிறப்பாக் கவனித்துக் கொண்டனர்.
செய்தியாளர் தங்கராஜ், நெல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக