மானாமதுரை பாபா நர்சரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 1 பிப்ரவரி, 2025

மானாமதுரை பாபா நர்சரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

IMG-20250201-WA0012

மானாமதுரை பாபா நர்சரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா நர்சரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூறுக்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த மாதிரிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக நீர் சுத்தகரிப்பு கருவி, வங்கி ஏடிஎம், ராக்கெட், நுரையீரல், பாரம்பரிய உணவுகள், மண்பாண்ட பொருட்கள், துரித உணவின் ஆபத்தை விளக்குதல் போன்றவற்றின் செயல்பாடுகளை மாணவர்கள் செய்து காட்சிப்படுத்தினர். குழந்தைகள் தங்களின் கண்காட்சி சாதனங்கள் குறித்து மிகச் சிறப்பாக பெற்றோர்களுக்கு விளக்கினார்கள். குழந்தைகளின் ஆர்வத்தை பெற்றோர்கள் ஊக்கப்படுத்தினர். விழாவில் மாதிரிகளை தேர்ந்தெடுக்க நடுவராக ஸ்டேஷன் மாஸ்டர் திரு தீபு அவர்கள் பங்கேற்று சிறப்பாக அமைந்த முதல் மூன்று அறிவியல் சாதனங்களை தேர்ந்தெடுத்தார். குழந்தைகளின் திறமைகளையும் அவர்களின் ஈடுபாட்டையும் பாராட்டினார். பள்ளியின் நிறுவனர் திருமதி அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் பரிசுகளை வழங்கினார். இவ்விழாவிற்கான மூன்னேற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி எம். பாண்டியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad