இராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோயில் மாசி மஹா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

இராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோயில் மாசி மஹா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

IMG-20250218-WA0396

இராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோயில்  மாசி மஹா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இராமநாதபுரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் ஸ்ரீ.இராமநாத சுவாமி கோவிலின் மாசி மாத மஹா சிவராத்திரி திருவிழா  கோவிலின்  கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றி  வைத்து  கோலாகலமாக தொடங்கியது. இன்று(பிப்18) முதல் மார்ச் 1ஆம் தேதி வரையில் தொடர்ந்து 12  நாட்கள் சிறப்பு பூஜைகள்  மற்றும் சுவாமி  பர்வதவர்த்தினி அம்மன் திருவீதி ரதம் பூபல்லக்கு, உலா என தொடர்ந்து  நடைபெறும் இவ்விழாவில்  இணை ஆணையாளர் சிவராம் குமார்,  தக்கார் பழனிக்குமார்  இராமநாதபுரம் சமஸ்தானம் ராணி லட்சுமி குமரன்சேதுபதி, இணை ஆணையாளர் பாரதி உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், மற்றும் கோயில் பணியாளர்கள் உட்பட  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad