ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் பூட்டுத்தாக்கு ஊராட்சி செயல்பட்டு வருகிறது. பூட்டுத்தாக்கு ஊராட்சியின் தலைவர். அருண் தங்கள் ஊராட்சியில் நடைபெற்று வரும் அவல நிலைகளை குறித்து பத்திரிக்கை யாளர்களிடம் மனம் திறந்தார் அவர் பேசிய போது பூட்டுத்தாக்கு ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன இதில் சித்ரா, பேபி,வாசுதேவன் சுதாகர் ஆகிய நான்கு வார்டு உறுப்பினர்கள் கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி மன்ற கூட்டங்களில் ஒரு தீர்மானத்தில் கூட இதுவரையில் கையெழுத்து போட்ட தில்லை ஊராட்சி வளர்ச்சிபணி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு வருகின்றனர் மேலும் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மனு கொடுத்து, புகார் அளித்து ஊராட்சி பணிகள் அனைத்தையும் முடக்கு கின்றனர் அவர்களின் வார்டுகளில் செய்யும் வேலைகளையும் தடுத்து நிறுத்துகின்றனர் ஊராட்சியில் 6 கோடி ரூபாய் நிதி உள்ளது ஆனாலும் ஒரு திட்டப் பணியும் செயல்படுத்த முடியவில்லை இவர்களுடன்
பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சேர்ந்து கொண்டு தவறான பொய் செய்திகளை பரப்பி வருகின்றார் இவர்களை தகுதி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன் இவர்களால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற முடியாததை நினைக்கும் போது மன வேதனையா இருக்கின்றது பூட்டுத்தாக்கு பஞ்சாயத்திற்கு நிரந்தர கிளார்க் இல்லை ஊராட்சியின் வளர்ச்சி பணிகளையும் திட்ட பணிகளையும் நிறைவேற்ற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென
கேட்டுக்கொண்டார் அதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் பூட்டுத்தாக்கு ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் வார்டு உறுப்பினராக இருந்து வரும் சுதாகர் வேலூர் மாநகராட்சியிலிருந்து மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கிராமத்தின் அருகிலுள்ள கல்குவாரி குட்டையில் கொட்டி மண் போட்டு மூடியுள்ளார் இதனால் நிலத்தடி நீரில் கழிவு நீர் கலந்துள்ளதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது இந்த சம்பவங்களை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், கலெக்டர், சுகாதாரத்துறை அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனைவருக்கும் புகார் மனு கொடுத் திருந்தோம் அதன் பிறகு அதிகாரிகள் ஆய்வு செய்து எஃப் ஐ ஆர் போட வலியுறுத்தினர் வாசுதேவன் என்பவர் இதற்கு முன்னர் வார்டு உறுப்பினராக இருந்தபோது பூட்டுத்தாக்கு ஊராட்சிக் குட்பட்ட அண்ணா நகர் மனை பிரிவில் மொத்தம் 112 பிளாட்டுகள் போடப் பட்டுள்ளன அதில் 49 சென்ட் ஊராட்சிக்கு பூங்கா அமைக்க இடம் கொடுத்ந துள்ளனர் அதனை வாசுதேவன் தன் பெயரில் ஒரு பிளாட், மகன் பேரில் ஒரு பிளாட் மீதமுள்ள 2 பிளாட்டுக்களை தனக்குத் தெரிந்தவர்கள் பேரில் பத்திர பதிவு செய்து முறைகேடு செய்துள்ளார்
இந்த முறைகேடு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்து விசாரணை முடிந்த நிலையில் பூங்காவிற்குரிய இடத்தை மீட்டெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது இந்த ஆணையை பெற்றுக் கொண்ட வாலாஜா வட்டாட்சியர், ஆற்காடு வட்டாரவளர்ச்சி அலுவலர் இதுவரையில் எந்த நடவடிக் கையும் எடுக்காமல் உயர்நீதிமன்ற ஆணையை அவமதித்து வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சி உறுப்பினர்களான வாசுதேவன், சுதாகர், மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர் அருண் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக