மானாமதுரை தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் பொது கிடா வெட்டு மற்றும் அன்னதானம் சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-மதுரை தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் குரோதி வருடம் மாசி மாதம் 3-ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை பொது கிடா வெட்டு, சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள பக்தகோடி பெருமக்கள் அனைவரும் பெரும் திரளாக தவறாது கலந்து கொண்டு ஸ்ரீ தர்ம முனீஸ்வரரின் அருளாசி பெற வேண்டி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக