தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிதாக பொறுப்பாளராக கிரிஸ்சொடங்கர் அவர்களை சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து உள்ளது.அவர் இன்னும் தமிழ்நாடு வருவதற்க்குள் சில திறமையற்ற மாவட்ட தலைவர்கள் டெல்லிக்கு சென்று தாங்கள் கையாலாகாத காரியத்தை மறைக்கும் நோக்கத்தில் உள்ள சில மாவட்ட தலைவர்கள், தமிழகத்தில் கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று கிராம கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஊக்க படுத்தி கொண்டு வரும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை அவர்கள் மீது வீண் பழி சுமத்தி குறை கூறி கொண்டு இருக்கும் சில மாவட்ட தலைவர்கள் தாங்கள் வயதான காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால் திறமையாக பணி செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் டெல்லிக்கு படை எடுப்பது ஏன் என்பது தெரியவில்லை மேலும் இந்த குழுவில் உள்ள
மாவட்ட தலைவர்களில் பல பேர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட தலைவர்களாக சும்மா இருந்து கொண்டு தங்கள் மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பங்காற்றாமல் சோம்பேறிகளாக இருந்து வருகிறார்கள்.
மேலும் இவர்கள் தாங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பதவியை பயன்படுத்தி கொண்டு முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு அரசியல் செய்யும் எட்டப்பர்கள் ஆவர்.எனவே மிகவும் திறமையான கட்சி வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல் படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து மாவட்ட தலைவர்களையும் உடனடியாக நீக்க வேண்டும்.மேலும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முழு சுதந்திரம் அளித்து செயல் பட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என் .சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக