குடியாத்தம் ,பிப் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊராட்சி ஏரிப்பட்டறை கிராமத்தில் ஸ்ரீ கணபதிக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரிக்கும் நவகிரகத்திற்கும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் ஒன்பதாம் தேதி காலை 6 மணிக்கு முதல் கால பூஜை ஒன்பது மணிக்கு கணபதி ஓமம் நவகிரக ஓமம் வாஸ்துவமும் மாலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜை மங்கள இசை கலச அலங்காரம் வாஸ்து பூஜை பிரவேச பலி நாடி சந்தனம் திரவிய ஓமம் அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் காப்பு கட்டுதல் நடந்தது. இதைத் தடர்ந்து பத்தாம் தேதி நேற்று காலை ஏழு மணிக்கு கோ பூஜை தம்பதி சங்கல்பம் தத்துவார்ச்சனை வேதபாராயணம் பத்து மணிக்கு கும்ப கலசம் கடம் புறப்பாடு 10:20 க்கு ஸ்ரீ கணபதிக்கும் சாமுண் டீஸ்வரி அம்மனுக்கும் நவகிரகத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது 10:30க்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை கோயில் நிர்வாகிகள் ஊர் பெரிய வர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக