நீலகிரி - எமரால்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் எமரால்டு டவுன் பகுதியில் தமிழக அரசு சார்பில் பாரம்பரிய கலைக்குழுவினரின் போதையால் ஏற்படும் தீமைகளை பற்றிய விழிப்புணர்வு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிகரெட், பீடி, மதுவால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியும் தமிழக அரசு சார்பில் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் பாடல்பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுற்றுவட்டார பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக