பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த கர்நாடக மாநில அரசு பஸ் கண்டக்டர்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த கர்நாடக மாநில அரசு பஸ் கண்டக்டர்!


வேலூர், பிப்.14-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேற்றைய முன் தினம் மாலை சுமார் 5.15 மணி அளவில் குடியாத்தத்தில் இருந்து கர்நாடக மாநிலம்  கோலார் தங்க வயலுக்கு  (KGF) KGF)7F1723 என்ற பதிவு எண்ணை கொண்ட  கர்நாடக அரசு மாநில பேருந்து  சென்றது.  இதில் பேரணாம்பட்டு பயணிகள் ஏராளமா னோர் பயணிகள் பயணித்தனர். நடத்துனர் பேரணாம்பட்டிற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் நடத்து னரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுவாக குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டிற்கு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும், தனியார் பேருந்துகளும் 13 ரூபாய் கட்டணமாக வசூலிப்பது வழக்கம். ஆனால் கர்நாடக மாநில பேருந்துகள் 15 ரூபாய் கட்டணமாக வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த நடத்துனர் 25 ரூபாய் வசூல் செய்தார். இது எந்த விதத்தில் நியாயமாகும். அப்படித்தான் அவ்வளவு தான் கட்டணம் என்று இப்பேருந்தின் நடத்துனர் உடும்பு பிடியாக 25 ரூபாய் கட்டணம் வசூலிப் பதில் உறுதியாக இருந்தார். வேறு வழி இல்லாமல் பயணிகளும் 25 ரூபாய் கொடுத்து டிக்கெட்  பெற்றுக் கொண்டனர். இதனால் பயணிகள் மிகுந்த வேதனையும், துன்பத் தையும் அனுபவித்தனர்.  எனவே இது குறித்து வேலூர் மாவட்ட  போக்குவரத்து கழக அதிகாரிகளும் கோலார் தங்க வயல் (KGF)  கர்நாடக அரசு மாநில போக்குவரத்து கழக அதிகாரிகளும் அதிக கட்டணம் வசூலித்த நடத்துனர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிக பணம் கொடுத்து ஏமாந்த பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad