மூளை அனியுரிசம் வெடித்த ஒன்பது மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை.
மதுரை ஹானா ஜோசப் மருத்துவர்கள் மூளை அனியுரிசம் கட்டி வெடித்து இருந்த கைக்குழந்தைக்கு மிகச்சிக்கலான நியூரோ எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். தென் தமிழகத்தின் நரம்பியல் மற்றும் விபத்து சிகிச்சைக்கு பலராலும் பரிந்துரைக்கப்படும் முண்ணனி மருத்துமனையான ஹானா ஜோசப் மருத்துவமனையின் மருத்துவர்கள் ஒன்பது மாதமே ஆன கைக்குழந்தைக்கு மூளை அனியுரிசம் கட்டி வெடித்து இருப்பதை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டறிந்து அக்குழந்தைக்கு மிகச்சிக்கலான உயிர் காக்கும் நியூரோ எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சையை பலூன் அசிஸ்டட் காயில் மூலம் வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்துள்ளனர். இது மதுரையில் செய்யப்பட்ட மிக அரிதான சிகிச்சைகளில் ஒன்று. மேலும் உலக அளவில் மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய அறுவை சிகிச்சைகள் கைக்குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சை மூளை அனியுரிசம் வெடிப்பு ஏற்பட்ட கைக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சிகிச்சை மிக அரியது. புதுமையான அணுகுமுறை, வெற்றிகரமான முடிவுகள் என்பது நம் இந்திய நாட்டின் வலிமையை உலகிற்க்கு உணர்த்துவதோடு எதிர்காலத்தில் இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை தரும் என ஹானா ஜோசப் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அருண்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். உடன் மருத்துவர் விநாயகமணி இருந்தார்.இந்நிகழ்வில் தலைமை சந்தை மேலாளர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக