வாணியம்பாடி அருகே டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து. டேங்க்ரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 5 ஆயிரம் லீட்டர் டீசல் சாலையில் வீணானது.
வாணியம்பாடி, பிப்.20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டேங்கரில் விரிசல் ஏற்பட்டு சுமார் 5 ஆயிரம் லீட்டர் டீசல் சாலையில் வீணாகியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய நெடுஞ்சாலை துறையினர், தாலுக்கா காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவ்வழியாக வந்த வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்க உரிய ஏற்பாடுகளை செய்த பின்பு லாரியை பாதுகாப்பாக மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தி உள்ளனர்.இதனை தொடர்ந்து டேங்கர் லாரியிலிருந்து டீசல் விழுந்த இடத்தில் மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க மர தூள் கொட்டி போக்குவரத்து தொடங்கினர் தொடங்கினர்.
விபத்தில் லாரி டேங்கரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுமார் 5 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் சிதறி வீணானது.
மேலும் விபத்துக்குள்ளான டேங்கர் லாரி பெங்களூரில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசல் லோடு ஏற்றிக்கொண்டு சென்னையில் இருக்கக்கூடிய தனியார் கம்பெனிக்கு டெலிவரி செய்வதற்காக கொண்டு சென்றதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டேங்கர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக