கன்னியாகுமரி தாழக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் இரவு நேரத்தில் படுத்து இருந்த 2 ஆடுகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழக்குடி பேருந்து நிறுத்தம் முன்பு இரவு நேரத்தில் 2 ஆடுகள் படுத்து கிடந்தது,அப்போது மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு ஆசாமிகள் அந்த 2ஆடுகளை தூக்கி,மோட்டார் சைக்கிளில் வைத்து திருடி சென்றனர்,இதனை ஒருவர் மறைந்திருந்து வீடியோவாக பதிவு செய்துள்ளார்,தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்கள் வைரலாகியுள்ளது,மேலும் போலீசார் ஆடு திருடர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர், ஏற்கனவே கடந்த ஆண்டு ஆரல்வாய்மொழி காவல் நிலைய பகுதியில் காரில் சென்று ஆடுகளை திருடிச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக