உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயான கொள்ளை நடைபெறுவதற்கு முன்பு சிறப்பு வழிபாடு. 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை , திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது இந்த அம்மன் சுவாமிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும் அதனைத் தொடர்ந்து நாளை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று கீரனூர் காலனியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அம்மனுக்கு சேலை தேங்காய் பூ மாலை வளையல் குங்குமம் என அம்மனுக்கு தேவையான அனைத்தும் சீர்வரிசை போல் ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு வழிபாடு செய்தனர் இந்த அம்மன் ஆலயத்தில் ஆதிதிராவிட மக்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு அம்மனை மகிழ்ச்சியோடு வழிபட்ட ஆதிதிராவிட மக்கள் இருப்பினும் பிற சமூகத்தினரால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக