மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக நேற்று (24.02.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.தயாளன், மாவட்ட பொறுப்பாளர் திரு.கே.எம்.ராஜு உதகை நகரமன்றத்தலைவர் திருமதி.வாணீஸ்வரி, உதகை நகரமன்றத் துணைத்தலைவர் திரு.ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் திரு.ஜார்ஜ் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீன தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக