உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் கிளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி, தலைமை காவலர் மேகவள்ளி ஆகியோர்களால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காவலன் ஆப் பற்றியும், புதிதாக மாற்றம் செய்யப்பட்ட சட்டங்கள் பற்றியும் ( BNSS, BNS )இலவச உதவி எண் 1098,181 பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் போக்சோ வழக்கு சம்பந்தமாகவும் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் பெண்குழந்தைகளை தனியாக எங்கும் செல்ல கூடாது என்றும் அறிவுரை கூறி விழிப்புணர்வு வழங்கினார், நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் கலைச்செல்வி முன்னிலை வைத்தனர், உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் தலைவர் வேலா. கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், எழுத்தாளர்கள் பாக்கியலட்சுமி, ஆனந்தராஜ், குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் ,முதுகலை ஆசிரியர்கள் ராஜவேல், பாஸ்கரன், விருதாவூர் தமிழ் சங்கத்தின் தலைவர் சண்முக பிச்சை உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர் உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் சார்பில் மாணவ சமுதாயம் தமிழை கற்க வேண்டும் எழுத்துப்பிழை இல்லாமல் சொற்றொடர்களை எழுத வேண்டும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் பேசிய பின்பு பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் கலைச்செல்வி அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து புத்தகம் பரிசு வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக